#T20 WorldCup 2022: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.!

Default Image

டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி. வென்றுள்ளது 

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்(54*) மற்றும் மிட்சேல் மார்ஷ்(45) ரன்களுடன் 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்களும், பரூக்கி 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

169 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக குல்படின் நைப் 39 ரன்களும், ரஷீத் கான் 48*ரன்களும் எடுத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்