#T20 WorldCup 2022: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங் .!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங் .

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலககோப்பை தொடரில் சூப்பர்-12 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்றைய போட்டியில் வென்று அரையிறுதிக்கு செல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச்  விளையாடமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக மேத்தியு வேட் தலைமை வகிப்பார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,

ஆஸ்திரேலிய அணி: கேமரூன் கிரீன், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட்(w/c), பாட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

ஆப்கானிஸ்தான் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ்(w), உஸ்மான் கானி, இப்ராஹிம் சத்ரான், குல்பாடின் நைப், தர்வீஷ் ரசூலி, நஜிபுல்லா சத்ரான், முகமது நபி(c), ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்