டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் அரையிறுதியில் விளையாடும் நியூசிலாந்து அணி 152 ரன்கள் குவித்துள்ளது.
பாக்-நியூசிலாந்து மோதும் முதல் அரையிறுதியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக வில்லியம்சன் 46 ரன்களும், டேரில் மிட்சேல் 53 ரன்களும் குவித்துள்ளனர். பாக். அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.