#Ind vs Eng Live: தடுமாறும் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 159
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காமல் இருந்த விராட் கோலி இப்போட்டியில் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜே ராய் மற்றும் ஜே பேர்ஸ்டோவ் ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.ஆனாலும் இந்த தொடக்கத்தை இந்திய பந்து வீச்சாளர்கள் உடைத்தனர்.
தற்பொழுது வரை இங்கிலாந்து அணி 33 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளது.சாஹல் 3 விக்கெட்களையும் ,ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் மற்றும் ஷமி ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
இந்தியா லெவன்: ரோஹித் சர்மா(கே), எஸ் தவான், வி கோஹ்லி, எஸ் யாதவ், ஆர் பந்த் (வி.கே), எச்.பாண்டியா, ஆர்.ஜடேஜா, எம். ஷமி, ஜே பும்ரா, பி.கிருஷ்ணா, ஒய் சாஹல்.
இங்கிலாந்து லெவன்: ஜே ராய், ஜே பேர்ஸ்டோவ், ஜே ரூட், பி ஸ்டோக்ஸ், ஜே பட்லர்(கே/வி) , எல் லிவிங்ஸ்டோன், எம் அலி, சி ஓவர்டன், டி வில்லி, பி கார்ஸ், ஆர் டாப்லி.