தனது கையெழுத்தை பயன்படுத்தி ரூ.4.5 கோடி மோசடி செய்ததாக சேவாக் மனைவி புகார்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கின் மனைவி ஆர்த்தி .இவர் தொழில் நண்பர் ஒருவர் தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.4.5 கோடி கடன் வாங்கியுள்ளார்.அந்த கடனை திருப்பி கொடுக்காமல் தன்னை சிக்க வைத்ததாக போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார்.
போலீசாரிடம் ஆர்த்தி கொடுத்த புகாரில் , தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தியும் , தனது கணவரின் பெயரையும் தவறாக பயன்படுத்தியும் இந்த கடன் வாங்கியதாக இதை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியுள்ளார்.
தன்னை இந்த பிரச்சனையில் சிக்க வைத்த தொழில் நண்பர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார். இந்நிலையில் ஆர்த்தியின் புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025