உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடி பெயர்

Sardar Vallabhai Patel stadium in Motera, Gujarat named as Narendra Modi stadium.

அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இதனிடையே இன்று மொடேராவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.இந்த அரங்கத்தில் 1.10 லட்சம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். பழைய விளையாட்டரங்கம் 2016-ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட போது,54,000 பேர் அமரும் வசதி அதில் இருந்தது. புதிய அரங்கத்திற்கான அடிக்கல் 2018-ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தால் நாட்டப்பட்டது.இந்நிலையில் இந்த உலகின் மிகப் பெரிய மைதானத்துக்கு  பிரதமர் மோடியின் பெயர்சூட்டப்பட்டுள்ளது.