ரஷீத் கான் மனைவி அனுஷ்கா ஷர்மாவா.? கூகிளில் அதிர்ச்சி.!
அதைத் தொடர்ந்து, மனைவியின் பெயர் அனுஷ்கா சர்மா என்றும் கூகிள் காட்டுகிறது. திருமண தேதியை பொறுத்தவரையில், கோலியுடனான திருமண தேதியான 11, 2017 என்று காண்பித்துள்ளது.
ரஷீத் கான் மனைவி என்று தேடினால் அனுஷ்கா ஷர்மாவின் பெயர் ஏன் தோன்றுகிறது?
அதாவது, ரஷீத் கான் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் போது உங்கள் விருப்பமான பாலிவுட் நடிகை யார் என்று கேட்கப்பட்டது, அதற்கு அனுஷ்கா ஷர்மா மற்றும் பிரீத்தி ஜிந்தா என்று ரஷீத் தெரிவித்திருந்தார். அதன்பின், இது சர்ச்சை செய்தியாக உருவெடுத்து தொடர்ந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் ரஷீத் கான் ஆவேசமடைந்தார். இதுவே இவர்களுக்கு இடையேயான தொடர்பு என்பதாகும்.
இதனால் தான் கூகிள் அனுஷ்கா ஷர்மாவை ரஷீத் கானின் மனைவியாகக் காட்டுகிறது. ஆனால் இதில் துளிக்கூட உண்மை இல்லை. உண்மை என்னவென்றால் ரஷீத் கானுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதே குறிபிடத்தக்கது.