ஐபிஎல் 2024 : கடைசிவரை போராடிய பஞ்சாப்.. ராஜஸ்தான் திரில் வெற்றி..!

PBKSvRR

ஐபிஎல் 2024:   ராஜஸ்தான் அணி  19.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் , ராஜஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான்  பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 29 ரன்களும், லிவிங்ஸ்டோன் 21 ரன்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் கேசவ் மகாராஜ், அவேஷ் கான் தலா  2 விக்கெட்டையும், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், குல்தீப் சென் தலா 1 விக்கெட்டை பறித்தனர். 148 ரன்கள் எளிதான இலக்குடன் ராஜஸ்தான் அணியில் கோட்யான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர்.  நிதானமாக விளையாடிய கோட்யான் 24 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த  கேப்டன் சஞ்சு சாம்சன் 18,  ரியான் பராக் 23, துருவ் ஜூரல் 6 ரன்களுடன் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசியில் இறங்கிய ஹெட்மியர் 10 பந்தில் 27* ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

இறுதியாக ராஜஸ்தான் அணி  19.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் ரபாடா, சாம் கரண் தலா 2 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங், லிவிங்ஸ்டன், ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்