25 வயதில் டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்திய ரபாடா..!

Rabada has taken 200 wickets in just 44 Tests

பாகிஸ்தானில் தென்னாப்பிரிக்கா அணிக்கும், பாகிஸ்தானிற்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி இருந்து 220 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு இறங்கிய பாகிஸ்தான் அணி இன்று 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதை தொடர்ந்து, இப்போட்டியில் ரபாடா 3 விக்கெட்டுகளை பறித்தார். இதனால் டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஹசன் அலி விக்கெட்டை பறிததன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

ரபாடா டெஸ்ட் போட்டியில்  வெறும் 44 போட்டிகளில் விளையாடி 200 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.