போட்டி போட்ட அணிகள்.. 18 கோடிக்கு தக்க வைத்த பஞ்சாப்! முதல் வீரராக ஏலம் சென்றார் ஹர்ஷதீப் சிங்!
ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஐபிஎல் மெகா ஏலம் சவுதியில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. அதில், முதல் வீரராக இந்திய அணியின் இடது கை வேக பந்து வீச்சாளரான அர்ஷதீப் சிங் ஏலம் சென்றார்.
அர்ஷதீப் சிங்கிற்கு முதல் அணியாக சென்னை அணி ஏலம் கேட்டது, அவர்களைத் தொடர்ந்து டெல்லி அணியும் ஏலத்தில் குதித்தது. அதன்பின் வரிசையாக ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகளும் போட்டியிட்டது. வெகு நேரம் கடுமையாக சென்ற இந்த போட்டியில் கடைசியில் ஹைதரபாத் அணியும் பஞ்சாப் அணியும் மோதியது.
இறுதியாக, ரூ.15.50 கோடிக்கு ஹைதரபாத் அணி ஏலம் கேட்டது, முடிவில் RTM உபயோகப்படுத்தி பஞ்சாப் அணி ரூ.18 கோடிக்கு வாங்கியது. அர்ஷதீப் சிங் முன்னதாகவே பஞ்சாப் அணிக்காக விளையாடினர், அவரை பஞ்சாப் அணி வெளியில் விட்டு தற்போது பஞ்சாப் அணி தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.