பாகிஸ்தான் வீரரின் இரண்டு வயது மகள் புற்று நோயால் மரணம்!

This news gives information about Pakistan's two-year-old daughter dies of cancer

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா புற்றுநோயால் உயிர் இழந்தார். ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா இரண்டு வயதான இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நூர் பாத்திமா அமெரிக்கா சென்று சிகிக்சை பெற்று வந்தார்.புற்று நோயானது நான்காவது கட்டத்தை எட்டியது.அதனால் நூர் பாத்திமாவிற்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது.

அப்போது ஆசிப் அலி இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வந்தார்.இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நூர் பாத்திமா  உயிரிழந்தார். தனது மகள் உயிரிழந்த தகவல் கிடைத்ததும் இங்கிலாந்தில் இருந்து ஆசிப் அலி அமெரிக்கா சென்றார்.

நூர் பாத்திமாவின்  மறைவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர்.