IPL 2024 : புரூக்கை தொடர்ந்து டெல்லி அணிக்கு அடுத்த சறுக்கல் ..? என்கிடிக்கு பதிலாக இனி இவர் தான் !

Lungi Ingidi-Hari Brook [file image]

IPL 2024 : இந்த ஆண்டில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, சென்னை, டெல்லி உள்ளிட அணிகளின் வீரர்களுக்கு காயங்களோ அல்லது வீரர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவோ ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாமல் போகிறார்கள். இதனால் அந்தந்த அணியின் உரிமையாளர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். தற்போது, டெல்லி அணியில் அவரை இந்த ஆண்டிற்காக 4 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தார்கள். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை தந்து தனிப்பட்ட தேவைக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருந்தார்.

Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி ..!

அவரை தொடர்ந்து தற்போது தென் ஆப்ரிக்காவின் இளம் வேக பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி காயம் காரணமாக நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார்.  தற்போது அவருக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர் இடம் பெற்று இருக்கிறார். ஜேக் ஃப்ரேசரை டெல்லி அணி ரூ.50 லட்சம் கொடுத்து எடுத்துருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே ஆன தொடரில் இங்கிடிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. தற்போது, அதிலிருந்து மீண்டு வராத நிலையில் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து அவர் விலகி இருக்கிறார். இதனால் அவருக்கு பதிலாக ஜேக் ஃப்ரேசரை களமிறக்க உள்ளது டெல்லி அணி. ஜேக் ஃப்ரேசர், சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒரு நாள் தொடரில் இவர் அறிமுகமானார்.

Read More :- IPL 2024 : ஒரே அணியில் ரெண்டு மலிங்கா ? ஐபிஎல்லில் மிரட்ட போகும் சிஎஸ்கே !

இவர் மொத்தமாக 2 ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளார். அந்த 2 ஒருநாள் தொடரிலும் சேர்த்து 50 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலிய நாட்டில் உள்ளூரில் நடைபெறும் டி20 போட்டிகளில் (ஐபிஎல் போன்ற தொடர்களில்) அவர் ஆக்ரோஷமாக விளையாடி இருக்கிறார். இதனை கருத்தில் கொண்டு தற்போது டெல்லி அணி இவர் இங்கிடிக்கு பதிலாக ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கிறது. இவரது ஆக்ரோஷமான விளையாட்டு டெல்லி அணிக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்