என்னுடைய கேப்டன்சி ரிக்கி பாண்டிங் இருப்பதால் சிறப்பாக இருக்கிறது- ரிஷப் பண்ட்..!

"My captaincy is better because of Ricky Ponting," said Delhi captain Rishabh Pund

ரிக்கி பாண்டிங் இருப்பதால் என்னுடைய கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது என்று டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது அதன் படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தனர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19. 1 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசியத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து டெல்லி அணி புள்ளிவிவரப்பட்டியலில் 2 வது இடத்திற்கு சென்றது. இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது ” என்னுடைய கேப்டன்சி பணியை நான் சிறப்பாக செய்வதாக உணர்கிறேன். அணியில் பிற மூத்த வீரர்கள் இருப்பது எனக்கு அணியை  வழிநடத்த பெரிதும் உதவியது. என்னுடைய கேப்டன்சி ரிக்கி பாண்டிங் இருப்பதால் சிறப்பாக இருக்கிறது. ஒரு விக்கெட் கீப்பராக நான் விளையாட்டைப் படித்துக்கொண்டே இருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவது ஒரு சவலாகத்தான் இருக்கிறது, ஆனால் ஒரு அணியாக இப்போது நாங்கள் அணிக்கு வெளிய நடப்பது குறித்து யோசிக்கவில்லை.  பிசிசிஐ எங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது அதனால் கிரிக்கெட்டை பற்றி மட்டுமே யோசிக்கிறோம்” என்றும் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

என்னுடைய கேப்டன்சி ரிக்கி பாண்டிங் இருப்பதால் சிறப்பாக இருக்கிறது- ரிஷப் பண்ட்..!