அதிரடியில் அலறவிட்ட மும்பை...திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்கள் எடுத்துள்ளது.

Mumbai Indians 1st

ஜெய்ப்பூர் :இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.

ஆரம்பமே விக்கெட் விடாமல் சரியாக விளையாடினாள் தான் எதிரணிக்கு நல்ல டார்கெட் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா இருவரும் விளையாடினார்கள் என்று சொல்லலாம். இருவரும் ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடினார்கள். ஒரு பக்கம் ரியான் ரிக்கெல்டன் அரை சதம் விளாச மற்றொரு பக்கம் ரோஹித் சர்மா அரை சதம் விளாச எதிரணி வீரர்கள் மிரண்டு போனார்கள்.

100 ரன்களை இருவருடைய பார்ட்னர்ஷிப் கடந்த நிலையில், அந்த சமயம் ரியான் ரிக்கல்டன் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக களத்தில் நின்று கொண்டிருந்த ரோஹித் சர்மாவும் சிறிது நேரத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருவரும் ஆட்டமிழந்த போதும் அவர்களால் செய்யவேண்டிய வேலையை செய்த காரணத்தால் பெரிய அளவில் அழுத்தம் இல்லை என்று சொல்லலாம்.

இரண்டு விக்கெட் இழந்தபோது மும்பை அணி 123 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் சூர்யா குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா இருவரும் இருந்தனர். முதலில் அவர்கள் இருவரும் அதிரடி காட்டிய நிலையில் அதே அதிரடியை தொடரும் வகையில் சூர்யா – ஹர்திக் ஜோடி களத்தில் நின்று கொண்டு விளையாடியது. ஒரு பக்கம் சூர்யா சிக்ஸர் பவுண்டரி என எடுத்த நிலையில், மற்றொரு பக்கம் பாண்டியா பவுண்டரி விளாசிக்கொண்டு இருந்தார்.

இருவரும் போட்டி போட்டு அதிரடி காட்டினார்கள் என்று தான் சொல்லவேண்டும். இருவருடைய சூர்யா48*, ஹர்திக் 48* அதிரடி ஆட்டம் காரணமாக  20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 217 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக ராஜஸ்தான் அணி 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது. மேலும், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக  மஹிஷ் திங்க்சன், ரியான் பராக் இருவரும் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.