ஆஸ்திரேலியா அணி விளையாடி கொண்டிருந்த போது, இங்கிலாந்து ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் மூன்றாவது நாளில் நடந்த ஒரு சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் நடைபெறும் போது, இரு அணிகளின் ரசிகர்களும் மைதானத்திற்கு வந்து வீரர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடி கொண்டிருந்த போது, இங்கிலாந்து ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினர்.
சில நொடிகளுக்குப் பிறகு அப்பெண் சரி என்று சொல்ல, இதையடுத்து இருவரும் முத்தம் கொடுத்து தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரின் காதல் கதை 2017 ஆஷஸ் காலத்தில் முதல் தொடங்கியது. இருவரும் முதல் முறையாக ஒரு போட்டியின் போது சந்தித்தனர்.
பின்னர் இருவரும் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததால் இன்று கபா டெஸ்ட் போட்டியின் போது தனது காதலை இங்கிலாந்து ரசிகர் வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node