#IPL2022: ஐபிஎல் ரசிகர்களுக்கு நற்செய்தி! – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 15-ஆவது சீசன் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 10 அணிகளும் போட்டிபோட்டு கொண்டு விளையாடி வருகிறது. இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. மகாராஷ்டிராவை அடிப்படையாக கொண்ட மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஐபிஎல் 2022 போட்டியைக் காண மைதானங்களில் 25 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ மற்றும் மகாராஷ்டிரா அரசு இடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, ஐபிஎல் முதல் கட்டத்திற்கு 25 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டது. அதன்படி, ஐபிஎல் போட்டிகள் 25% பார்வையாளர்களுடன் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக 25% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில், தற்போது 50% அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா குறைந்து வருவதால், 1ம் தேதி முதல் கட்டுப்பாடுகளில் முழு தளர்வுகள் அளிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025