ஊக்க மருந்து பயன்படுத்திய இந்திய வீரர் பிரித்வி ஷா 8 மாதம் விளையாட தடை!

ஷயத் முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் பிரித்வி ஷாவிற்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த  சோதனையில்  தடை செய்யப்பட்ட

ஷயத் முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் பிரித்வி ஷாவிற்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த  சோதனையில்  தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து தன்மையுடைய இருமல் மாத்திரையை பிரித்வி ஷா பயன்படுத்தியது  தெரியவந்தது.

இது தொடர்பாக ஜூலை 16-ஆம் தேதி பிரித்வி ஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் பிரித்வி ஷா இந்திய அணியில் மார்ச் 16-ம் தேதி முதல் நவம்பர் 15-ம்  தேதி வரை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் வருங்கால நம்பிக்கையாக  இருந்த பிரித்வி ஷா  சர்வதேச போட்டிகளைப்  இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 237  ரன்கள் எடுத்துள்ளார்.அதில்  ஒரு சதமும் அடங்கும்.