‘இந்தியா சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினார்கள்’ ..! மனம் திறந்து பாராட்டிய பிரட்லீ

பிரட்லீ : கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரை ரோஹித் ஷர்மாவின் இந்திய அணி அபாரமாக வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த வந்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட்லீ வெற்றி பெற்ற இந்திய அணியை பாராட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார்.
அவர் பேசியபோது, “முதலில் இந்திய அணிக்கு எனது பெரிய, பெரிய வாழ்த்துக்கள். இந்திய கிரிக்கெட் வீரர்களின் முகத்தில் உள்ள உணர்ச்சிகளை பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. தற்போது, விராட் மற்றும் ரோஹித் டி20யில் ஓய்வை அறிவித்துள்ளனர். மறுபக்கம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் வீழ்த்தி தடம் பதித்திருந்தனர்.
எனவே, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல வீரர்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். நான் ஒன்று நேர்மையாக சொல்வேன், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சரியான கிரிக்கெட்டை விளையாடினார்கள் . அவர்கள் மிகவும் நேர்மையாக விளையாடியதோடு, ஒரு வலுவான அணியாகவும் தெரிந்தார்கள். ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி கண்ட இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்”, என்று கூறி இருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025