‘இந்தியா ஏமாத்தி தான் ஜெயிக்கிறாங்க .. ஐசிசி விசாரிக்க வேண்டும்’- முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்!

டி20 உலகக்கோப்பை: இந்த ஆண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணி தற்போது அரை இறுதி வரை தகுதி பெற்றுள்ளது நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் மறுமுனையில் பாகிஸ்தான் அணி கடந்த 2022ம் ஆண்டில் இறுதி போட்டி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியிருக்கிறது. இந்த முறை லீக் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் இந்திய அணி மீது குற்றம் சாடியுள்ளார்.
அவர் சமீபத்தில் பாகிஸ்தான் டிவி சேனலில் பேசிய போது, ” பாகிஸ்தான் எதிரான போட்டியில் இந்திய அணி 119 ரன்கள் தான் அடித்து இருந்தது. ஆனால், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. மேலும், 88 ரன்கள் இருக்கும் போது தான் 5 விக்கெட் பாகிஸ்தான் இழந்து இருந்தது.
ஆனால், அதன் பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது. இதற்கு காரணம் இந்திய அணி பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்தது தான். இந்திய வீரரான ஆர்ஸ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து ஐசிசி விசாரிக்க வேண்டும். இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்” என அவர் கூறி இருந்தார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது.
மேலும், தற்போதைய நிலையில் பந்தை சேதப்படுத்துவது என்பது முடியாத காரியம் எனவும் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் வயிற்று எரிச்சலில் இப்படி பேசுவதாகவும் ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025