India vs Zimbabwe: 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவேயை வீழ்த்தி இந்தியா வெற்றி

Default Image

இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே எல் ராகுல் (51),ரோஹித் ஷர்மா (15) எடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த விராட் கோலி 26 ரன்னிற்கு ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடியால் 61 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 187 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி தொடக்க முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல் ஆட்டத்தால் சற்று ஆறுதலான ஸ்கோரை எடுக்க முடிந்தது.

17.5 ஓவர்களில்  10 விக்கெட்களை இழந்த ஜிம்பாவே 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியுற்றது.ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள்  அரையிறுதியில் மோத  உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்