12 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 123ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 42 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 3 பௌண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 48 பந்துகளில் 46ரன்கள் தேவைப்படுகிறது.
ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியுடன் இங்கிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 36 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 1 பௌண்டரி, 5 சிக்சருடன் 51 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
இங்கிலாந்து அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 28 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 1 பௌண்டரி, 3 சிக்சருடன் 33 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
169 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது. ஆட்டத்தின் முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் குவித்துள்ளது. ஜோஸ் பட்லர் 12 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 4 பௌண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களும், கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.
அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மா 27 ரன்களுக்கு அட்டமிழந்தார்.இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்துள்ளது.
பவர் பிளே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் குவிப்பு. ரோஹித் 3 பௌண்டரிகளுடன் 20 ரன்களுடனும், கோலி ஒரு சிக்சருடன் 12 ரன்களுடனும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
India are 38/1 at the end of the Powerplay ????#INDvENG | ????: https://t.co/HlaLdf632a
Head to our app and website to follow the #T20WorldCup action ???? https://t.co/wGiqb2w0sM pic.twitter.com/cANX3S5q7p
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2022
ஆட்டத்தின் முதல் சிக்சை பறக்க விட்டார், விராட் கோலி. 4 ஆவது ஒவரின் முதல் பந்தில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் கோலி சிக்ஸ் அடித்தார். 4 ஓவர் முடிவில் இந்தியா 21/1 ரன்கள் குவிப்பு. ரோஹித் 5 ரன்களுடனும், கோலி 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
3 ஓவர் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் குவிப்பு, ரோஹித் 4 ரன்களுடனும், கோலி 2 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
கிறிஸ் வோக்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் 4 ஆவது பந்தில் ராகுல்(5), பட்லரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
முதல் ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் குவிப்பு. ராகுல், பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்திலேயே பௌண்டரி அடித்தார்,ரோஹித் 1 ரன்னுடனும், ராகுல் 5 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.