T20 WC : நான் எனது அரைசதத்தால் மகிழ்ச்சியடையவில்லை,இதுதான் மிக முக்கியம் – ரோஹித் சர்மா

Default Image

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற இன்றைய  போட்டியில் இந்தியா நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் ரோஹித் சர்மா போட்டிக்கு பின்னர் அளித்த  பேட்டியில் தனது அரை சதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில்,தொடக்கத்தில் நாங்கள் கொஞ்சம் மெதுவாக விளையாடினோம்,ஆனால் அது எனக்கும் விராட்டுக்கும் இடையேயான உரையாடல் படி விளையாடினோம்,நாங்கள் பெரிய ஷாட்களை விளையாடுவதற்கு  காத்திருக்க வேண்டியிருந்தது என்றும்,

நான் எனது அரைசதத்தில் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை, ஆனால் ரன்களை எடுப்பதுதான் முக்கியம் – அவை நல்ல ரன்களாக இருந்தாலும் அல்லது மோசமான  ரன்களாக இருந்தாலும் பரவாயில்லை. நாளின் முடிவில், இது தன்னம்பிக்கையை நிலைநிறுத்துவதாகும்” என்று போட்டிக்கு பின்னர் ரோஹித் கூறினார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரின் அரை சதங்களுடன் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குரூப் 2 வில் முதலிடத்தில் உள்ளது இந்தியா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்