ஜடேஜாவின் ஆட்டத்தை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் – விராட் கோலி..!!

Virat Kohli said after the match yesterday that we have fallen to a single player

தனி ஒரு வீரரிடம் நங்கள் வீழ்ந்துவிட்டோம் என்று விராட் கோலி நேற்று போட்டி முடிவடைந்தவுடன் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 19 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 62*, டு பிளெசிஸ் 50 ரன்கள் எடுத்தனர்.

அதனைதொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி, 9 விக்கெட்கள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஜடேஜா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேட்டிங்கில் கடைசி ஓவரில் 36 ரன்கள் எடுத்து கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிகம் ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதனால் பலர் ஜடேஜாவை பாராட்டி வருகின்றார்கள். அந்த வகையில் நேற்று போட்டி முடிந்தவுடன் பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியது ” இன்று ஜடேஜாவின் திறமை அனைவர்க்கும் தெரிந்திருக்கும், அடுத்த இரண்டு மாதங்களில் அவர் இந்தியா அணிக்காக விளையாடவுள்ளார். நம்பிக்கையுடன் அவர் களத்தில் விளையாடுவதால் பல வாய்ப்புகள் உருவாகிறது. அவருடைய பேட்டிங் என்னை மகிழ்ச்சி  அடைய செய்துள்ளது. தனி ஒரு வீரரிடம் நங்கள் வீழ்ந்துவிட்டோம்” என்றும் கூறியுள்ளார்.