இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரின்போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னிற்கும் ஆடுகளத்தில் பல இனிமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது.
இதில் குறிப்பாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை பார்த்து உங்களது வயது குறைவாக இருக்கிறது வேண்டுமானால் எங்கள் வீட்டிற்கு வந்து எனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள், நான் என் மனைவியுடன் வெளியே செல்ல வேண்டும், என்று கலாய்த்திருந்தார்.
இது அப்போதிலிருந்தே டிரென்ட் ஆகியுள்ளது அதன் பின்னர் ரிஷப் பன்ட் டிம் பெய்னின் வீட்டிற்குச் சென்று அவரது குழந்தைகளை கையிலெடுத்து நான் உண்மையிலேயே உங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்கிறேன் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது உலகின் சிறந்த இளம் வளர்ந்துவரும் வீரராக ஐசிசி என அறிவிக்கப்பட்டார் அதனை ஐசிஐசிஐ வித்தியாசமாக அறிவித்துள்ளது.
unknown node