வீடியோ: மைதானத்தில் பிராவோவின் முதுகில் ஏறிய ஹெட்மியர் ..!

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பரவசத்தில் பிராவோவின் முதுகில் ஏறிய ஹெட்மயர்

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பரவசத்தில் பிராவோவின் முதுகில் ஏறிய ஹெட்மயர்

துபாயில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 சீசனின் இந்த 50 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்ற பரவசத்தில் ஹெட்மியர்சக நாட்டு வீரர் பிராவோவின் முதுகில் ஏறிய வீடியோ வைரலாகி வருகிறது.

இப்போட்டியில் வெற்றி மூலம் டெல்லி 13 போட்டிகளில் 10 போட்டிகளில்  20 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு சென்றது. சென்னை 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலில் இறங்கிய சென்னை 136 ரன்கள் எடுக்க 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி 19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தார். இறுதி ஓவரை வீசிய பிராவோ, நான்காவது பந்து வீசியபோது அதை ரபாடா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

அப்போது மறுபுறம் களத்தில் நின்ற ஹெட்மியர் டெல்லி அணி போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பிராவோவின் முதுகில் ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது. இப்போட்டியில் ஹெட்மயர் 28  எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். அதில், இரண்டு பவுண்டரிகளும், 1 சிக்ஸர் அடங்கும்.

டெல்லி அணிக்கு இன்னும் ஒரு லீக் ஆட்டம் மீதமுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இதற்கிடையில், சென்னை அணி வியாழன்கிழமை பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.

unknown node