கவுதம் கம்பீர் :இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது, இதில் 3 டி20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 27-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் முதலில் 3 டி20 போட்டிகள் நடைபெற்றன. அதன்படி நேற்றோடு அந்த டி20 தொடர் முடிவடைந்தது.
அந்த 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி உள்ளது. இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பதவியேற்ற பிறகு இந்திய அணி விளையாடும் முதல் சுற்று பயணத்தொடர் இதுவாகும்.
இதன் காரணமாகவே இந்த தொடருக்கு ஒரு தனி எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வந்தது, இந்த நிலையில் பிசிசிஐ இந்த தொடருக்காக இந்திய அணியை அறிவித்த போது பல கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்தனர். அதற்கெல்லாம் கம்பீர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளித்திருந்தார்.
தற்போது இந்திய அணி கம்பீரின் பயிற்சியின் கீழ் முதல் டி20 தொடரை கைப்பற்றி கம்பீரின் வெற்றி கணக்கை தொடங்கி வைத்துள்ளனர். நேற்று இந்த தொடரின் இறுதி போட்டி முடிந்த பிறகு பயிற்சியாளரான கம்பீர் இந்திய வீரர்கள் அட்வைஸ் கொடுத்து பேசினார். அந்த வீடியோவை பிசிசிஐ அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “நண்பர்களே, சிறப்பான தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சூரியகுமார் யாதவ் சிறந்த கேப்டன்சிக்கும், அதைவிட முக்கியமாக பேட்டிங்கிற்கும் எனது வாழ்த்துக்கள். நண்பர்களே, இந்த தொடர் தொடங்குவதற்கு நான் உங்களிடம் என்ன கேட்டேனோ அதை முழுமையாக வழங்கிவிடீர்கள்.
நாம் தொடர்ந்து வெற்றி பெருகிறறோம், நாம் நம் திறமைகளை மேம்படுத்திகிறோம். மேலும், இது போன்ற விக்கெட்டுகளில் விளையாடுவதில் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். அது நமக்கு புதிதான அனுபவங்களை கற்று கொடுக்கும். எனவே, நாம் முதலில் பிட்சின் நிலைமைகளை மிக விரைவாக மதிப்பீடு செய்ய வேண்டும், இது ஒரு சிறந்த தொடர் வெற்றி என்பது மிக முக்கியமானது”, என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
unknown node