பிகிலேலே....எனக்கு 2 டிக்கெட்கள் வேண்டும்..!! – இலங்கை கிரிக்கெட் வீரர் ட்விட்..!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர்

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் ராயப்பன் கதாபாத்திரத்தில் விஜய் ‘பிகிலேலேலே…’ என்று சொல்லுவதை பலர் காலய்த்து வருகின்றனர்.

unknown node

Russel Arnoldஇருப்பினும், பிரபல இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரஸ்ஸல் அர்னால்டு பிகில் டிரெய்லரை கண்டு தனது டிவிட்டரில் ” பிகிலேலேலே .. டேய் மாமா @srinimaama16, தளபதி விஜய் மற்றும் தமிழ் படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. பிகில் ட்ரைலர் ரொம்ப பிடிச்சிருந்தது. ராயப்பன் அந்தர் மாஸ். யாரவது எனக்கு படத்திற்கு இரண்டு டிக்கெட் கொடுங்க” என ட்விட் செய்துள்ளார்.

unknown node