ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலிஸ் பெர்ரியும் ரப்பி வீரர் மாட் டூமுவாவும் தங்கள் நான்கு ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்துவிட்டனர்.
ஆஸ்திரேலிய நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெர்ரியும் ரப்பி வீரர் (Rugby Player) மாட் டூமுவா ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர்.
unknown nodeஇந்நிலையில், அண்மையில் இவர்கள் தங்கள் திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக பரஸ்பரம் முடிவுஎடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இது ஆஸ்திரேலிய விளையாட்டு துறையினர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.
கிரிக்கெட் வீராங்கனை எலிஸ் பெர்ரி கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, கல்யாண மோதிரம் இன்றி பங்கேற்றபோதே நட்சத்திர ஜோடி பிரிந்த செய்தி கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் தங்கள் பிரிந்த செய்தியை அறிவித்துவிட்டனர்.