தோனி வேணும்னே பண்றாரு - உண்மையை உடைத்த சைமன் டல்!

தோனி போட்டியின்போது மைதானத்திற்கு வராததற்கு ஃபிட்னஸ் ஒரே காரணம் அல்ல என சைமன் டல் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தோனி தற்போது அணியின் பயிற்சியில் தீவிரமாக பங்கேற்று வரும் நிலையில், உண்மையான போட்டிகளின்போது மைதானத்திற்கு வராதது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு ஃபிட்னஸ் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை ஊகித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்ட சைமன் டல், “தோனி போட்டியின்போது மைதானத்திற்கு வராததற்கு ஃபிட்னஸ் ஒரே காரணம் அல்ல. ரசிகர்கள் மத்தியில் தன்மீது இருக்கும் அதிகப்படியான வெளிச்சத்தைக் குறைத்து, புதிய தலைமையின் கீழ் அணி முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தன்னுடைய எஃபெக்ட்டால் ருதுராஜ் கைக்வாட் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தோனி மிகவும் உறுதியாக உள்ளார். இது நிஜமாகவே மிகப் புத்திசாலித்தனமான மற்றும் மிகவும் பக்குவமான முடிவு” என்று தெரிவித்தார். தோனி தற்போது அணியின் மென்டர் பொறுப்பில் இருந்தாலும், போட்டிகளின்போது டக்-அவுட் அல்லது பிளேயர்ஸ் பெவிலியனில் இருந்து விலகி இருப்பதன் மூலம், ருதுராஜ் தலைமையிலான புதிய அணி தனது சொந்த பாணியில், சுதந்திரமாகவும் அழுத்தமின்றியும் ஆடுவதற்கு வழிவகை செய்து கொடுத்துள்ளார் என்று சைமன் டல் பாராட்டியுள்ளார்.

தோனியின் இந்த அணுகுமுறை, அணியின் எதிர்காலத்தை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட முதிர்ச்சியான முடிவு என்று பலரும் கருதுகின்றனர். ருதுராஜ் கைக்வாட் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தோனி முழு ஆதரவை வழங்கி வருவதாகவும், அதற்கான வழியை அவர் தானாகவே விட்டுக்கொடுத்துள்ளதாகவும் சைமன் டல் சுட்டிக்காட்டினார். மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடி வரும் சென்னை அணி புள்ளிவிவரப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.