தோனியின் போராட்டம் வீண்! CSK-வை வீழ்த்தி டெல்லி மிரட்டலான வெற்றி

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 13வது போட்டி விசாகப்பட்டினம் டாக்டர் வை எஸ் ராஜசேகர் ரெட்டி எஸ்சிஏ-வீடிசி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி வீரர்களான வார்னர் மற்றும் பண்ட் அரை சதம் விளாசினர்

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் 1 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்து சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

அடுத்து வந்த ரஹானே 45 ரன்களும், மிட்செல் 34 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் தோனி களத்துக்குள் நுழைந்தார். பின்னர் சிக்சர் மற்றும் பவுண்டரிகள் என ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டின போதிலும் சென்னை அணியால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை.

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி 16 பந்துகளில் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்