சச்சின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்.!

Default Image

டேவிட் வார்னர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் அடித்த சதம் மூலம் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.

மெல்போர்னில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், இரட்டை சதமடித்துள்ளார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த டேவிட் வார்னர், ஒட்டுமொத்தமாக பத்தாவது மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலியர் ஆவார்.

மேலும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டிற்கு பிறகு 100-வது டெஸ்ட்டில் இரட்டை சதமடிக்கும் இரண்டாவது வீரர் டேவிட் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வார்னர், தொடக்க வீரராக களமிறங்கி அனைத்து பார்மட்களிலும் சேர்த்து 45 சதமடித்து, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தனது 100 சதங்களில் 45 சதங்கள் தொடக்க வீரராக களமிறங்கி எடுத்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்