சேப்பாக்கம் திரும்பும் சென்னை !! லக்னோவுடன் மீண்டும் பலப்பரீட்சை !!

CSKvsLSG

ஐபிஎல் 2024 : இன்றைய நாளின் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் மோதுகிறது.

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இரண்டு போட்டிகளுக்கு பிறகு சென்னை அணி மீண்டும் தனது  சொந்த மண்ணில் விளையாடுகிறது.

மேலும், இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியை லக்னோவில் விளையாடியது. அந்த போட்டியில் லக்னோ அணி சென்னை அணியை எளிதில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இன்றைய போட்டியில் சென்னை அணி லக்னோ அணியை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் விளையாடுவார்கள்.

நேருக்கு நேர் 

இந்த இரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் நடைபெற்று உள்ளது. அந்த 3 போட்டிகளில் சென்னை அணி 1 போட்டியிலும், லக்னோ அணி 1போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மீதம் உள்ள 1 போட்டி முடிவு இல்லாமல் இருக்கிறது. இதன் படி பார்த்தால் இந்த போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

லக்னோ அணி வீரர்கள் 

குயின்டன் டி காக், கே.எல். ராகுல்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்

சென்னை அணி வீரர்கள் 

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்