2026 T20 உலகக்கோப்பை முன் BCCI அதிரடி – ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு! ரோஹித் கோலி என்ன Grade?

2025-26 BCCI மத்திய ஒப்பந்த பட்டியல் (Central Contract List) இப்போது வெளியாகியுள்ளது.

virat kohli and rohit sharma

டெல்லி :2025-26 BCCI மத்திய ஒப்பந்தப் பட்டியல் (Central Contract List) இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தத்தில் வீரர்கள் நான்கு தரங்களாக (Grade A, B, C, D) பிரிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஒப்பந்தம் வீரர்களின் ஊதியம், தேசிய அணி முன்னுரிமை, பயிற்சி வசதிகள் ஆகியவற்றை தீர்மானிக்கும் மிக முக்கியமான ஆவணமாகும்.

Grade A(அதிகபட்ச ஊதியம் & முன்னுரிமை வீரர்கள்):

ஜஸ்பிரித் பும்ரா

சுப்மன் கில்

அக்ஷர் படேல்

குல்தீப் யாதவ்

இவர்கள் இந்திய அணியின் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள். குறிப்பாக பும்ரா மற்றும் கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த தரத்தில் இடம்பிடித்துள்ளனர்.

Grade B(உயர் ஊதியம் & முக்கிய வீரர்கள்):

விராட் கோலி

ரோஹித் சர்மா

கே.எல். ராகுல்

ஹர்திக் பாண்டியா

ரவீந்திர ஜடேஜா

முகமது சிராஜ்

ஹர்ஷித் ராணா

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

வாஷிங்டன் சுந்தர்

அர்ஷ்தீப் சிங்

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் இந்த தரத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவர்கள் T20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவதால் ஏற்பட்ட மாற்றமாகும்.

Grade C(நடுத்தர ஊதியம் & உறுதியான வீரர்கள்):இந்த தரத்தில் T20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ருதுராஜ் கெய்க்வாட்

ஸ்ரேயாஸ் ஐயர்

திருவ் ஜுரேல்

சூர்யகுமார் யாதவ்

அபிஷேக் சர்மா

சஞ்சு சாம்சன்

வருண் சக்ரவர்த்தி

நிதிஷ் குமார் ரெட்டி

திலக் வர்மா

இஷான் கிஷன்

இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோருக்கு இந்த தரத்தில் இடம்கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Grade D(அடிப்படை ஊதியம் & எதிர்கால வீரர்கள்):இந்த தரத்தில் எதிர்காலத்தில் பெரிய வாய்ப்பு பெறக்கூடிய இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரிங்கு சிங்

சிவம் துபே

ஆகாஷ் தீப்

பிரசித் கிருஷ்ணா

சர்பராஸ் கான்

சாய் சுதர்சன்

தேவ்தத் படிக்கல்

ரவி பிஷ்ணோய்

இந்த ஒப்பந்தத்தில் இளம் வீரர்களுக்கு (குறிப்பாக Grade A & B-யில்) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா Grade B-க்கு தள்ளப்பட்டுள்ளது அவர்களின் தற்போதைய கவனம் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இருப்பதால் ஏற்பட்ட மாற்றமாகும். இந்த ஒப்பந்தம் 2026 T20 உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணியின் தயாரிப்புக்கு முக்கியமானது.