முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரமும் RCB-யின் முன்னாள் வீரருமான ஏ.பி. டி வில்லியர்ஸ், IPL 2026-இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2025-இல் RCB முதல் முறையாக IPL கோப்பையை வென்றதற்கு முழு அணியின் பங்களிப்பே காரணம் என்று அவர் புகழ்ந்துள்ளார்.
டி வில்லியர்ஸ் JioStar-இல் பேசுகையில், “2025 இறுதிப்போட்டி சிறந்த உதாரணம். விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தாலும், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் அதிரடியாக ஆடி 190+ ரன்கள் எடுக்க உதவினர். க்ருனால் பாண்ட்யா பந்துவீச்சிலும் பங்களித்தார். RCB இப்போது விராட் கோலி மட்டுமல்ல, முழு அணியாக உருவெடுத்துள்ளது” என்றார்.
விராட் கோலியின் தற்போதைய நிலை குறித்து பேசிய டி வில்லியர்ஸ், “விராட்டிடம் நான் பார்த்த மிகச்சிறந்த வொர்க் எத்திக் உள்ளது. அவர் IPL-க்கு undercooked-ஆக வரமாட்டார். அவர் சொன்னதைப் போல, ஒரு கோப்பை வென்றால் இரண்டு, மூன்று, நான்கு வென்றுவிடலாம் என்று அவர் நம்புகிறார். RCB இப்போது அந்த ஜோனில் உள்ளது. இம்முறை back-to-back வெல்ல முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கோலியின் கடந்த சீசன் ஆட்டத்தை பாராட்டிய டி வில்லியர்ஸ், “கடந்த சீசனில் கோலி ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தி அதிரடியாக ஆடினார். அவர் ஆங்கர் ரோலில் இருந்து வெளியே வந்து ஆக்ரோஷமாக ஆடியது RCB-க்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இம்முறையும் அதே ஃபார்மை எதிர்பார்க்கலாம்” என்றார்.இறுதியாக டி வில்லியர்ஸ் கோலிக்கு அறிவுரை வழங்கினார். “விராட் நிச்சயம் தயாராக இருப்பார். அவர் இடைவெளிக்குப் பிறகு சிறப்பாக ஆடுவார்.
என் அறிவுரை: அங்கு சென்று வெறுமனே என்ஜாய் செய்யுங்கள். RCB மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.ஒட்டுமொத்தமாக, டி வில்லியர்ஸின் இந்த கருத்து RCB ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. 2025-இல் முதல் கோப்பையை வென்ற RCB, 2026-இல் back-to-back வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள IPL 2026-இல் கோலி மற்றும் RCB அணி எப்படி செயல்படும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
