நேற்றைய போட்டியில் 2முறை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்து: சுருண்டு விழுந்த ஸ்மித் !

Default Image

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாவது போட்டியில் நான்காம் நாள் போட்டி நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இப்போட்டிகளில் 92 ரன்கள் எடுத்து ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்தார்.ஸ்மித்  70 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் தனது கையில் அடிவாங்கி தடுமாறினார்.

பின்னர் 80 ரன்கள் எடுத்த போது மீண்டும் ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்டீவன் சுமித் தலையில் இருந்த ஹெல்மெட்டை பதம் பார்த்தது 140 கிலோமீட்டர் வேகத்தில் வந்த ஆர்ச்சர் பந்து ஹெல்மெட்டை அடித்து நிலைகுலைந்து மைதானத்தில் ஸ்டீவன் சுமித் கீழே விழுந்தார்.  பின்னர் சிறிது நேரம் ரிட்டயர் ஹிட் ஆகி மீண்டும் விளையாடினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்