ShahRukh Khan: ஐபிஎல் போட்டியின் போது நடிகர் ஷாருக்கான் பொதுவெளியில் புகைப்பிடித்தது விமர்சனத்தை கிளப்பியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 3ஆவது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிலையில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அதனை பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கு அர்ப்பணித்தார்.
Read More –KKRvsSRH : கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்ற கொல்கத்தா ..!!
இதற்கு தனது முத்தத்தை ஷாருக்கான் பரிசாக கொடுத்தார். இந்த நிலையில் தான் போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஷாருக்கான் தனது அறைக்கு சென்று புகைப்பிடிக்க தொடங்கினார். இது தொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.
Read More –GTvsMI : ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி ..!! வெற்றி யாருக்கு ..?
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஷாருக்கான் அவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய நிலையில் இப்படி பொது வெளியில் புகைப்படிப்பது சரியானது அல்ல என பலரும் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
unknown node