கேரளாவில் இருந்து தமிழகம் வரும் மக்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramanian has said that people coming to Tamil Nadu from Kerala will be tested for the Zika virus.

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் மக்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஜிப்ஸி காலனியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கேரள எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கேரள எல்லை பகுதியில் உள்ள யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் மக்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் 3,929 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கருப்பு பூஞ்சை நோய்க்காக தமிழகம் முழுவதும் 7,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கேரளாவில், 22 மாதக் குழந்தை, 45 வயது முதியர் மற்றும் 29 வயது சுகாதாரப் பணியாளர் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் 18 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதியாகியுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் மக்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்