கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பெங்களூருக்கு அருகில் உள்ள சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் தலகயலாபெட்டா கிராமத்தில் கொசுக்களில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருக்கக்கூடிய 68 இடங்களில் கொசுக்களின் உடலில் ஜிகா வைரஸ் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டதாகவும், மொத்தம் 100 மாதிரிகள் பெறப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த மாதிரிகளில் ஆறு சிக்கபல்லாபுராவில் உள்ள ஆறு இடங்களில் இருந்து பெறப்பட்டவை. பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் […]
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் மக்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஜிப்ஸி காலனியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கேரள எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கேரள எல்லை பகுதியில் உள்ள யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் கேரளாவில் […]
கேரளாவின் பாடசாலை பகுதியில் கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானதால், மொத்தம் பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 15 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், ஜிகா […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தாக்குதலில் இருந்தே இன்னும் முழுமையாக வெளியே வராத நிலையில், கேரளா மாநிலத்தில் ‘ஜிகா வைரஸ்’ என்ற புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிகா வைரஸ் என்றால் என்ன? ஜிகா வைரஸானது பெரும்பாலும், ஏடிஸ் இன கொசுக்களால் தான் பரவுகிறது. இந்த கொசுக்கள், பகல் மற்றும் இரவு […]
கேரளாவில் கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மேலும் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் புதிதாக 10 பேருக்கு ஜிகா என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. கொரோனாவுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த வைரஸ் தொற்று அறிகுறிகளற்று இருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவிலிருந்து 13 பேரின் மாதிரிகள் புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து 10 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை […]