இளைஞர்கள் விவசாயத்திற்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும் – அசாம் முதல்வர்!

Assam Chief Minister Himanta Biswa Sharma has said that the youth in the state should dedicate themselves to agriculture.

மாநிலத்திலுள்ள இளைஞர்கள் விவசாயத்திற்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் விவசாயம் குறித்து தனது மாநிலத்தில் உள்ள மக்களுக்கு நேற்று தோல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், அசாமின் விளைநிலங்கள் சட்ட விரோத ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் விவசாய வயல்களில் தங்களை அர்ப்பணிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அரசு வேலை மற்றும் எளிதான வேலையில் நிற்காமல் விவசாயத்தில் பெரிய அளவில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அசாம் மக்கள் எப்பொழுதுமே வெளி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் மாநிலத்தில் உள்ள விவசாய நிலங்களை மக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் மீண்டும் அதை நிரூபிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.