உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட வேண்டும் என்று ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 67 வது பிறந்த நாள் ஆகும்.பிறந்த நாளை முன்னிட்டு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
unknown nodeஅவரது பதிவில், அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட “என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.