வீட்டில் இருந்தபடியே உங்கள் குறைகளை கூறலாம் – 1100 என்ற தொலைபேசி எண்ணை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

You can voice your grievances as if you were at home - the Chief Minister is starting the phone number 1100

மக்களின் குறைகளை தெரிவிக்க 1100 என்ற எண்ணை அழைத்து அரசின் சேவையை பெரும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆண்டின் முதல் தமிழக   கூட்டத்தொடரில் உரையாற்றிய தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித், அரசின் சேவைகளை வீட்டில் இருந்தே பெற  1100 என்ற எண்ணை அழைக்கும் சேவை தொடங்கப்படும்  என்று அறிவித்தார். இந்த எண்ணிற்கு அழைத்தால் அரசின் சேவைகளை விரைவில் பெற இயலும் எனவும்  குறிப்பிட்டார்.

தமிழக அரசின் அனைத்து துறைகளும் இந்த சேவை மூலம் முதலமைச்சரின் அலுவலக உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்க உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் வீட்டில் இருந்தபடியே சேவையை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு துறை குறித்து புகார் வந்தால் அந்த புகார் குறித்து தொடர்புடைய துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தபடியே உங்கள் குறைகளை கூறலாம் – 1100 என்ற தொலைபேசி எண்ணை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்