பட்டியலினத்தவர் வீட்டில் உணவருந்திய யோகி ஆதித்யநாத்..!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பட்டியலின வகுப்பை சேர்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் வீட்டில் உணவருந்தி உள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பட்டியலின வகுப்பை சேர்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் வீட்டில் உணவருந்தி உள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தின், கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற மகரசங்கராந்தி விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் அங்குள்ள பட்டியலின வகுப்பை சேர்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் வீட்டில் உணவருந்தி உள்ளார்.

இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், பட்டியல் இனத்தைச் சார்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் அழைப்பின் பெயரில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாகவும், தன்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். வரும் மாதம் உத்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி வரும் நிலையில் யோகி ஆதித்யநாத் பட்டியலினத்தவர் வீட்டிலுள்ள வந்து உணவருந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.