யெச்சூரி மகன் மறைவு.., ஒபிஎஸ் இரங்கல்..!

— O Panneerselvam (@OfficeOfOPS) April 22, 2021

சீதாராம் யெச்சூரி மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆஷிஷ் யெச்சூரி மறைவை தொடர்ந்து பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் சிபிஐ (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரியின் மகன் ஸ்ரீ ஆஷிஷ் யெச்சூரி காலமானார் என்ற செய்தியால் நான் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

unknown node