இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக, 15,200 அடி உயரமுள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள தாஷிகாங்கில் உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த வாக்குச்சாவடி 15,256 அடி உயரத்தில் அமைந்துள்ளதாக இமாச்சலின் தலைமை நிர்வாக அதிகாரி விடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் உள்ள 52 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்காக இங்கு இந்த உயரமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு எளிதாக வாக்களிக்கும் வகையில், “மாதிரி வாக்குச்சாவடியாக” அமைக்கப்பட்டுள்ளது என்று தலைமைச் செயல் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
unknown node