BREAKING: தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தலா...? சத்யபிரதா சாகு விளக்கம்..!

He said he had not made any recommendation to the Election Commission to hold the elections in Tamil Nadu in two phases.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கட்டங்களாக நடத்த வாய்ப்பு என நேற்று தகவல் வெளியான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை எனவும் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும்,கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவில் அனைத்து கட்சியினரும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர் என தெரிவித்தனர்.

BREAKING: தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தலா...? சத்யபிரதா சாகு விளக்கம்..!