தலைமை தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. தலைமை தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது என உச்சநீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது. புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனைத்தொடர்ந்து […]
குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார். குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பொது தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் […]
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக கட்டாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக தயானந்த் கட்டாரியா IAS நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையராக பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியாவை நியமிப்பதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் உத்தரவின்பேரில், தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். இதனிடையே, கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது […]
திமுக எம்பி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்து அவர் பிரசாரம் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார். திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்கு ஆதரவாக ஆயிரம் விளக்குத் தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட போது, முதல்வர் பழனிச்சாமியைப் பற்றி தரக்குறைவாக பேசி பிரச்சாரம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் […]
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கட்டங்களாக நடத்த வாய்ப்பு என நேற்று தகவல் வெளியான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை எனவும் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். மேலும்,கடந்த டிசம்பர் […]
ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக உள்ளவர் திவாகர் குப்தா. இவரின் பதவிக்காலம் வருகின்ற 31-ம் தேதியுடன் முடிய உள்ளதால், அந்த பதவி அசோக் லவாசாவுக்கு வழங்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவர் பதவியை அசோக் லவாசா ஏற்றுக்கொண்டார். இதனால், தேர்தல் ஆணையர் பதவியை லவாசா ராஜினாமா செய்து, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அசோக் லவாசாவின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டு, காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கு ராஜீவ் குமார் […]
வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் 6 -ஆம் தேதி பதவியேற்பார்கள் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் எந்த பாரபட்சமுமின்றி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் […]