ஏன் மு.க.ஸ்டாலின் அவசரப்படுகிறார் என்பது மட்டும் தெரியவில்லை – டிடிவி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது தவறு இல்லை என டிடிவி தினகரன் கருத்து.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது தவறு இல்லை என டிடிவி தினகரன் கருத்து.

திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ள நிலையில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள்,  ‘உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது தவறு இல்லை, ஏன் மு.க.ஸ்டாலின் அவசரப்படுகிறார் என்பது மட்டும் தெரியவில்லை. வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை மக்கள் எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

ஏன் மு.க.ஸ்டாலின் அவசரப்படுகிறார் என்பது மட்டும் தெரியவில்லை – டிடிவி