உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது தவறு இல்லை என டிடிவி தினகரன் கருத்து. திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ள நிலையில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள், ‘உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது தவறு இல்லை, ஏன் மு.க.ஸ்டாலின் […]
தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம் என டிடிவி தினகரன் பேட்டி. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம்; அனைத்து விஷயங்களிலும் எதிர்த்து பேசுவது முறையானது அல்ல என தெரிவித்துள்ளார். நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை வரவேற்கிறோம்; 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள […]
தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனை என டிடிவி தினகரன் ட்வீட். சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி குறித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது […]
வரும் காலத்தில் ஓ.பி.எஸ் உடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது என டிடிவி தினகரன் பேட்டி. அதிமுகவில் தற்போது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனி தனியாக பிரிந்து உள்ளனர். இந்த நிலையில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், வரும் காலத்தில் ஓ.பி.எஸ் உடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி. ஊடகங்களுக்கு தான் பா.ஜ.க எதிர்க்கட்சி. நிஜத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தான் எதிர்க்கட்சி. எங்களை மதிக்கும் தேசிய […]
ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் மக்களை வதைக்கும் வேலையை தி.மு.க அரசு ஆரம்பித்திருக்கிறது. சாமானிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெறவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.