யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை காட்டுவோம் – கர்நாடக முதல்வர்!

Karnataka Chief Minister Eduyurappa has said that they will show the dam in Megha Dadu whoever blocks it as the law is in their favor.

சட்டம் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை காட்டுவோம் என கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். அதில் மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது எனவும், தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இதனால் பயன் உண்டு எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாநிலங்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் உள்நோக்கத்தை பாராட்டுகிறேன். இருப்பினும் மேகதாது அணை காரணமாக தமிழகத்தின் விவசாய சமூகம் பாதிக்கப்படாது எனும் உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், எனவே மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்திருந்தார்.

மேலும், தமிழக முதல்வரை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது இது குறித்து கூறியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா, யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவோம் எனவும், சட்டம் தங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழக முதல்வருடன் இணைந்து இத்திட்டத்தை தொடங்கலாம் என தான் நினைத்ததாகவும், ஆனால் அவரிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.