சட்டம் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை காட்டுவோம் என கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். அதில் மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது எனவும், தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இதனால் பயன் உண்டு எனவும் குறிப்பிட்டிருந்தார். […]
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை அடுத்து, தமிழக அரசு, கர்நாடக அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த […]
கர்நாடகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அவர்கள் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில், கர்நாடகாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அம்மாநிலத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த முதல்வர் எடியூரப்பா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல நலத்திட்டங்கள் மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொண்டு […]
விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்க அனுமதிக்க வேண்டும்- எடியூரப்பா கோரிக்கை. மேகதாது அணைக்கு உடனே அனுமதி வழங்க டெல்லியில் பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, நாடாளுமன்ற நான்காவது நாளான மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடியை 15 நிமிடங்கள் […]
கர்நாடகாவில் பாதித்த மாவட்டங்களில் முதல்வர எடியூரப்பா இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கர்நாடகாவில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த மாத தொடக்கத்திலிருந்து கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், கனமழை விடாமல் பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையில் தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள வடகர்நாடக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். அதன்படி, இன்று எடியூரப்பா மழையால் […]